தவெக மாநாட்டு திடலில் 100 அடி கொடிக்கம்பம் சாய்ந்து விபத்து: கார் நொறுங்கியது

100-ft flagpole falls at Tvk conference, car crushed

மதுரை, ஆகஸ்ட் 20:

மதுரையில் நாளை நடைபெறவுள்ள தவெகவின் 2வது மாநாட்டிற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருந்தது. இதை முன்னிட்டு, மதுரை மாநாட்டு திடலில் இன்று தவெகவின் 100 அடி கொடிக்கம்பம் நட ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த 100 அடி உயரமான கொடிக்கம்பத்தை கிரேன் மூலம் நிறுத்தும் பணி நடைபெற்றது. அப்போது, எதிர்பாராத விதமாக கிரேனின் பெல்ட் திடீரென அறிந்ததால் கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்தது.

இந்த கொடிக்கம்பம் விழுந்து பாதையில் நிறுத்தப்பட்டிருந்த இன்னோவா கார் மீது விழுந்தது. இதனால் அந்த கார் பலத்த சேதம் அடைந்து சுக்கு நூறாக நொறுங்கியது. அதிஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் உயிர் சேதம் இலையென அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், சேதமைந்த காருக்கு பதிலாக புதிய கார் வாங்கித் தரப்படும் என தவெக உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தால் மாநாட்டு திடலில் பெரும் பரபரப்பும் அதிர்ச்சியும் ஏற்பட்டது.

Related posts

நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!

NDA கூட்டணியில் ராமதாசை சேர்க்க 3 நிபந்தனைகள் விதித்த அன்புமணி

தி.மு.க. – காங்கிரஸ் கூட்டணி தொடருமா? – மு.க.ஸ்டாலினை சந்தித்து ப.சிதம்பரம் ஆலோசனை