100 நாள் வேலை திட்டம் மாற்றம் – மத்திய அரசை கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

100-day scheme - DMK alliance parties protest against the central government

சென்னை, டிசம்பர் 24:

மேடவாக்கத்தில் மத்திய அரசை கண்டித்து தி.மு.க. கூட்டணி கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன் உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

அண்ணல் காந்தியடிகள் பெயரை நீக்கி 100 நாள் வேலைத்திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய பா.ஜ.க. அரசையும், ஒத்து ஊதும் அ.தி.மு.க.வையும் கண்டித்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி சார்பில் மாநிலம் முழுவதும் 400 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

அதில் 100 நாள் வேலை திட்டத்தை ஒழிக்கும் சட்டத்தை கொண்டு வந்த மத்திய அரசை கண்டித்தும், விபி-ஜி ராம் ஜி சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், இந்த ஆர்ப்பாட்டத்தில், 100 நாள் வேலை இனி இல்லை என முழக்கமிட்டனர். மத்திய அரசின் சட்டத்தை அ.தி.மு.க. ஆதரிப்பதற்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

Related posts

தஞ்சாவூரில் தவெக தலைவர் பங்கேற்க உள்ள கூட்டத்திற்கு போலீசார் அனுமதி

ஈபிஎஸ்வுடன் தொகுதி பங்கீடு பேச்சு: தென்மாவட்டங்களை குறிவைக்கும் பாஜக

டெல்லி புறப்பட்டார் எடப்பாடி பழனிசாமி!